Home இலங்கை கல்வி திருகோணமலை சாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் கையளிக்கப்பட்டன

திருகோணமலை சாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் கையளிக்கப்பட்டன

0

Courtesy: H A Roshan

திருகோணமலை(Trincomalee) மாவட்ட சாஹிரா கல்லூரியின் 2023ஆம் ஆண்டு  உயர்தர எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் இடைநிறுத்திவைக்கப்பட்ட தினத்தில் இருந்து அனைவரின் ஒத்துழைப்போடு எடுக்கப்பட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சாஹிரா கல்லூரியின் பொது மண்டபத்தில் நேற்று(04.07.2024)ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இணைந்து கல்லூரி அதிபர் முஹைஸ் அவர்களிடம் 70 உயர்தர மாணவர்களின் பெறுபேறுகளை கையளித்தனர்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

இதன்போது மாணவர்களின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்து திறம்பட செயற்பட்ட கிழக்குமாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதாவுக்கும் எம் சமூகம் சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என இம்ரான் எம். பி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா,திருகோணமலை வலய கல்விப்பணிப்பாளர் ரவி, தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் அஷ்ரப், கல்லூரி அதிபர் முகைஸ்,பிரதி அதிபர், ஆசிரியர்கள், SDEC உறுப்பினர்கள், OBA உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version