Home இலங்கை சமூகம் ஓய்வூதியதாரர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி : முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி : முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

0

கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவை நிறுத்தியது, மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என
மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kaviratne) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவை வழங்காமல் இடைநிறுத்தியது. இதன்படி ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஓய்வூதியதாரர்கள் 9,000 ரூபாவை இழந்துள்ளனர்.

ஒக்டோபர் ஓய்வூதியத்துடன் உரிய பணம் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ஓய்வூதிய நாளில் பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

பொதுத்தேர்தல் முடியும் வரை பணம் வழங்குவதை நிறுத்தி வைத்தால், ஓய்வூதியர்கள் நான்கு மாத கொடுப்பனவாக 12,000 ரூபாவை இழக்க நேரிடும்.

மேலும், பொதுத் தேர்தலின் முடிவில் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும்
மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உள்ளிட்ட மேலதிக விரிவான செய்திகளுக்கு ஐபிசி தமிழின் மதியநேர செய்தியுடன் இணைந்திருங்கள்…


https://www.youtube.com/embed/z-vuGpzI-So

NO COMMENTS

Exit mobile version