Home இலங்கை சமூகம் யாழ். மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

யாழ். மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

0

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு
செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற
மீளாய்வுக்கூட்டம் யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நேற்றையதினம்(04.04.2025) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட
கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைவரின் ஒத்துழைப்பு

மேலும், யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு 09
செயற்றிட்டங்களுக்கு 131.02 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது எனவும் இதனை
நீடித்து நிலைக்கும் வகையில் தொடர்புடைய பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள்
மற்றும் ஏனைய பங்குதார்களுடன் இணைந்து மிகவும் சரியான முறையில்
நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56.00 மில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை சென்ற ஆண்டு போல குறிப்பிடப்பட்ட காலத்தில் நிறைவேற்றி முடிக்க அனைவரின் ஒத்துழைப்பினையும்
நல்குமாறும் அரசாங்க அதிபர் கூறியுள்ளார். 

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), வீதி அபிவிருத்தி
திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம
பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல்
பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல்
பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா்
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

NO COMMENTS

Exit mobile version