Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் முதற்தர அனுபவம்: றீ(ச்)ஷாவின் புதிய அறிமுகம்!

தமிழர் பகுதியில் முதற்தர அனுபவம்: றீ(ச்)ஷாவின் புதிய அறிமுகம்!

0

கிளிநொச்சியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையமாக கருதப்படும் றீ(ச்)ஷா (Reecha) பண்ணையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதை களிக்க பல புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைத் தரும் ஒருங்கிணைந்த பண்ணைக்கு வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில், சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் நோக்கில் புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு 

தமிழர் பகுதியில் முதல் தடவையாக றீ(ச்)ஷா (Reecha) சுற்றுலாத் தளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் திளைக்க புதிய ரங்கராட்டின பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை (18.10.2025) முதல் குறித்த பொழுதுபோக்கு அம்சம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை (18.10.2025) காலை 8.30 க்கு பிரமாண்ட நிகழ்வுடன் ரங்காராட்டினம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version