தற்போதைய பரவலான வெள்ளம் மற்றும் பேரிடர் நிலைமை காரணமாக, குழந்தைகள் மத்தியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இன்ஃப்ளூவன்ஸா மற்றும் பிற குளிர் தொடர்பான நோய்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் அதிகரிக்கும் என்று வைத்தியர் தீபால் வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சல் நீண்ட காலமாக நீடித்தால்
வெள்ளம் வடிந்த பிறகு, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், எலி காய்ச்சல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் நீண்ட காலமாக நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
