Home சினிமா திருமணத்தை திடீரென தள்ளிவைத்த நடிகை ரித்விகா! என்ன நடந்தது?

திருமணத்தை திடீரென தள்ளிவைத்த நடிகை ரித்விகா! என்ன நடந்தது?

0

பரதேசி படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகி, அதற்குப்பிறகு மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் ரித்விகா.

அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலும் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை தள்ளி வைத்தது ஏன்?

நடிகை ரித்விகா ஒரு மாதத்திற்கு முன்பு தனது காதலர் வினோத் லக்ஷ்மணன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி அவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தற்போது அந்த திருமணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக ரித்விகா தனது திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version