Home இலங்கை சமூகம் முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்து – இருவர் படுகாயம்

முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்து – இருவர் படுகாயம்

0

முச்சக்கர வண்டியுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது வவுனியா (vavuniya) – நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இரட்டைபெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்றும்,
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியே
குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

Source: https://ibctamil.com/article/road-accident-in-vavuniya-1723624635

NO COMMENTS

Exit mobile version