Home இலங்கை சமூகம் இன்றும் – நாளையும் வீதிகள் முடக்கம் : வெளியான அறிவிப்பு

இன்றும் – நாளையும் வீதிகள் முடக்கம் : வெளியான அறிவிப்பு

0

இந்தியப் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு வீதிகள் மூடப்படுவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நரேந்திர மோடி, இன்று (04) மாலை இலங்கைக்கு வருகின்றார்.   

இந்த காரணத்தினால் கொழும்பு (Colombo) – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் மூடப்படுவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர்

இதன்படி, மேற்படி வீதிகள் இன்று (04) மாலை ஆறு மணிக்கும் இரவு பத்து மணிக்கும் இடையில், அவ்வப்போது மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளைய தினம் (05) கொழும்பு – காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version