Home இலங்கை சமூகம் முள்ளியவளையில் பட்டப்பகல் கொள்ளை: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசாரணை

முள்ளியவளையில் பட்டப்பகல் கொள்ளை: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசாரணை

0

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் பணம் பறிக்கப்பட்டு முச்சக்கரவண்டியும் அபகரித்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் தனியார் வங்கி ஒன்றிற்கு முன்பாக நேற்று 18.10.2024 தரித்து நின்ற முச்சக்கர வண்டியிலேயே கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி தவணை குத்தகை பணத்தினை கட்டவில்லை என தெரிவித்து
மூவரினால் அபகரிப்பு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளியவளை பொலிஸார்

இந்நிலையில் முச்சக்கர
வண்டியின் உரிமையாளரின் உடைமையில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபா பணத்தினையும்
அபகரித்து சென்றுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக
நபர்கள் மூவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவர் தப்பிச்சென்றுள்ளதாக
முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/robbery-in-broad-daylight-in-mulliyawela-1729348201

NO COMMENTS

Exit mobile version