Home இலங்கை பொருளாதாரம் டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வு

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வு

0

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளது.

இதன்படி, பெரும்பாலான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333 ரூபாய் மட்டத்திற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.25 ரூபாயாகவும், விற்பனை விலை 334.50 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.

விற்பனை விகிதம்

NDB வங்கியில் கொள்வனவு விலை 326.30 ரூபாயிலிருந்து 324.25 ரூபாயாகவும், விற்பனை விலை 335.30 ரூபாயிலிருந்து 333.25 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 326.82 ரூபாயிலிருந்து 324.70 ரூபாயாகவும், விற்பனை விலை 334.92 ரூபாயிலிருந்து 332.75 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 325.09 ரூபாயிலிருந்து 323.10 ரூபாயாகவும், விற்பனை விலை 335.00 ரூபாயிலிருந்து 333.00 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 326.50 ரூபாயிலிருந்து 325.00 ரூபாயாகவும், விற்பனை விலை 334.50 ரூபாயிலிருந்து 333.00 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/rupee-value-rises-further-against-the-dollar-23sep-1790143488

NO COMMENTS

Exit mobile version