Home உலகம் இரட்டை போரில் சிக்கிய ரஷ்யா: ஆட்டம் காணும் உலக அரசியல்

இரட்டை போரில் சிக்கிய ரஷ்யா: ஆட்டம் காணும் உலக அரசியல்

0

இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையே போர் வெடிப்பை எதிர்பார்க்க தவறிவிட்டதாக ரஷ்ய (Russia) தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை ரஷ்ய வெளியுறவுக்கொள்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான், இஸ்ரேல் இடையே ஒரு வாரத்திற்கும் மேல் போர் நீடித்து வருகின்ற நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியுறவுக் கொள்கை 

உக்ரைனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ரஷ்யா, மத்திய கிழக்கில் இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்பதை எதிர்பார்க்க தவறிவிட்டது.

இதன் காரணமாக, இந்த மோதலில் செல்வாக்கு செலுத்த சக்தியற்றதாக ரஷ்யா மாறி நிற்கின்றது எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை பெற முடியும் என்றும் நம்புகின்றது.

இந்த சூழலில் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு பதிலளிக்க ரஷ்யா போராடி வருவதாக வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் அதிகாரி

இஸ்ரேல் இவ்வளவு துணிச்சலான மற்றும் ஆபத்தான நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், தன்னை ஒரு சமாதானத் தூதர் என்று முத்திரை குத்திக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலையிட வேண்டாம் என்ற அழுத்தத்திற்கு அடிபணிவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரெம்ளினின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஒருவர், “ட்ரம்பின் வழக்கத்திற்கு மாறான நடத்தை மற்றும் ஒரு சமாதானத் தூதராக தனது பிம்பத்தைப் பாதுகாக்கும் அவரது விருப்பத்தை நாங்கள் நம்பினோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version