முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பற்றி எரியும் உக்ரைன்: ஈரானிய ஆயுதங்களை ஏவி சரமாரியாக தாக்கிய ரஷ்யா!!

ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலின் போது 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் உக்ரைனின் ஒரு F-16 போர் விமானம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, இந்த தாக்குதலில், 477 ட்ரோன்கள் (பெரும்பாலனவை ஈரானிய தயாரிப்பு ‘ஷாஹெட்’), 60 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

F-16 விமானி பலி

இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் F-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ, நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டபோது, விமானம் எதிரி தாக்குதலில் சிக்கி சேதமடைந்து வீழ்ந்ததுள்ளது. அவர் வெளியேற முனைந்தபோதும் அதற்கான நேரம் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.

பற்றி எரியும் உக்ரைன்: ஈரானிய ஆயுதங்களை ஏவி சரமாரியாக தாக்கிய ரஷ்யா!! | Russia Launched A Massive Airstrike On Ukraine

(image source aljazeera)

அத்துடன், உக்ரைனின், செர்காசி பகுதியில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஹெர்சன் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், லிவிவ், ட்ரொஹொபிச், மைகொலாயிவ் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உதவி கோரும்ஜெலென்ஸ்கி

தாக்குதல் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “இரவு முழுவதும் எச்சரிக்கை ஒலிகள் சத்தமாகக் கேட்டது. ரஷ்யா, எங்கள் மக்கள் வாழும் அனைத்து அமைப்புகளையும் குறிவைத்து தாக்கியுள்ளது.

பற்றி எரியும் உக்ரைன்: ஈரானிய ஆயுதங்களை ஏவி சரமாரியாக தாக்கிய ரஷ்யா!! | Russia Launched A Massive Airstrike On Ukraine

நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவையும், நவீன விமானப் பாதுகாப்பு முறைமைகளையும் எதிர்பார்க்கிறோம்.” என .தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவின்றி முடிந்த பின்னர், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்