முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவை நோக்கி நகரும் நேட்டோ..! எதிர்கால திட்டத்தை பகிரங்கமாக கூறிய புடின்

ரஷ்யாவின் தற்போதைய இலக்கு, F-16 போர்விமானங்களுக்கு ஏதுவாக காணப்படுகின்ற விமானத்தளங்களே என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அண்மையில், மொஸ்கோவின் வடமேற்கே உள்ள டோர்ஷோக் பகுதியில் உள்ள விமானப்படை விமானிகளிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மொஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! பின்னணியில் செயற்பட்ட வல்லரசு நாடுகள்

மொஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! பின்னணியில் செயற்பட்ட வல்லரசு நாடுகள்

ராணுவ அழுத்தம்

“நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள், எனவே மக்களை பாதுகாப்பதற்காகவே ரஷ்யா இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

ரஷ்யாவை நோக்கி நகரும் நேட்டோ..! எதிர்கால திட்டத்தை பகிரங்கமாக கூறிய புடின் | Russia Not Ready To Attack Nato Putin Warns F16

உக்ரைன் தனது மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ரஷ்யா மீது ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் F-16 போர்விமானங்களின் விநியோகத்திற்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 42, F-16 விமானங்கள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.

ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு

ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு

தாக்கி அழிக்கப்படும்

தவிரவும், அவற்றை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து உக்ரைன் விமானிகள் பல மாதங்களாக மேற்கு நாடுகளில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவை நோக்கி நகரும் நேட்டோ..! எதிர்கால திட்டத்தை பகிரங்கமாக கூறிய புடின் | Russia Not Ready To Attack Nato Putin Warns F16

F-16 விமானங்கள் தரையில் இருக்கும் போது குண்டுவீச்சு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க உயர்தர ஓடுபாதைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட ஹேங்கர்கள் தேவை.

உக்ரைரைனிலுள்ள விமானத்தளங்களில் எத்தனைக்கு அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அந்த F-16 போர் விமானங்கள் உக்ரைனுக்கு வந்தால் அது உடனடியாக தாக்கி அழிக்கப்படும்.” என எச்சரித்துள்ளார்.  

சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்