முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்கள் அறிந்துள்ள விடயம்: ருவான் விஜேவர்தன

ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே இந்த நாட்டை உயர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவரும் பிரதித் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

யக்கல நகர மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

தேர்தல் ஆண்டு

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன் வங்குரோத்து நிலையில் இருந்த நாடு மீண்டும் ஒரு ஸ்திரமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும்.

மக்கள் அறிந்துள்ள விடயம்: ருவான் விஜேவர்தன | Ruwan Wijewardhana Statement

அக்டோபர் மாதம் முதல் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் குடிமக்களாக உங்கள் பங்கு மிகவும் தீர்க்கமானது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நிவாரணம்

மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஜனாதிபதி விக்ரமசிங்க நன்கு அறிவார்.

எவ்வாறாயினும், வாழ்க்கைச் செலவைக் குறைத்து இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களைக் கொண்ட ஒரே நபர் அவர்தான்.

மக்கள் அறிந்துள்ள விடயம்: ருவான் விஜேவர்தன | Ruwan Wijewardhana Statement

முழு நாட்டிற்கும் ஒன்றிணைந்து பொருளாதார நிவாரணம் வழங்குவது கடினமானது. வங்குரோத்து நிலை ஏற்பட்டவுடன் உடனடியாக வழங்குவது கடினம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம்

இலங்கையில் அமைக்கப்படவுள்ள ஐஐடி தொழில்நுட்பக் கழகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்