Home இலங்கை சமூகம் மண்சரிவு அபாயம் – ஆபத்தான பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்

மண்சரிவு அபாயம் – ஆபத்தான பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்

0

கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல, ரத்தகல பகுதியிலிருந்தும், ஹட்டனில் உள்ள ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியிலிருந்தும் நிலச்சரிவு அபாயம் காரணமாக பல குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ருவன்வெல்ல ரத்தகல பகுதியைச் சேர்ந்த 11 குடும்பங்களை ரத்தகல ஆரம்ப பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக அனுப்ப நடவடிக்கை

இதேபோல், வட்டவல பகுதியில் உள்ள ரொசெல்ல மாணிக்கவத்த காலனியைச் சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றி வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version