Home இலங்கை அரசியல் கொழும்பின் புதிய மேயராக சாகல.. ஐ.தே.க. வழங்கியுள்ள விளக்கம்!

கொழும்பின் புதிய மேயராக சாகல.. ஐ.தே.க. வழங்கியுள்ள விளக்கம்!

0

கொழும்பின் புதிய மேயரை நியமிப்பது தொடர்பாக தமக்கு உரித்துடைய சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

 நடத்தப்பட்ட கலந்துரையாடல்..  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடன் வடிவமைக்கப்பட்ட குறித்த கடிதம் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், கொழும்பு மேயராக சாகல ரத்நாயக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது முற்றிலும் பொய்யான ஒன்று என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை எந்தக் கட்சியும் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version