முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் : சஜித் தி்ட்டவட்டம்

அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய வகையில், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்டமடையும் நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் : சஜித் தி்ட்டவட்டம் | Sajith Premadasa Privatization

நட்டமடையும் நிறுவனங்கள்

அரச நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களது உரிமைகளை பாதிக்காத வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரிச் செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நட்டமடையும் நிறுவனங்கள் முன்னெடுப்பதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பனை செய்வதாக சஜித் தரப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்