Home இலங்கை சமூகம் சடுதியாக குறைந்த உப்பு விலை

சடுதியாக குறைந்த உப்பு விலை

0

தேசிய உப்பு நிறுவனம் அயடீன் கலந்த லக் உப்பின் (lak lunu) விலையைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று (20.08.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய உப்பு நிறுவனம் நிறுவனத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அயடீன் கலந்த உப்பு

அதன்படி, 400 கிராம் அயடீன் கலந்த உப்பு தூள் பாக்கெட்டின் விலை ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது, மேலும் 1 கிலோகிராம் உப்புப் தூள் பாக்கெட்டின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புப் தூள் பாக்கெட் ரூ.100 விலையிலும், 1 கிலோகிராம் உப்புப் தூள் பாக்கெட் ரூ.200 விலையிலும், 1 கிலோகிராம் உப்புக் பாக்கெட் (கட்டிகள்) ரூ.150 விலையிலும் விற்பனை செய்யப்படும்.

அம்பாந்தோட்டை மகாலேவே, பூந்தல லேவே மற்றும் பலடுபன லேவே ஆகியவற்றில் உப்பு அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வழியில் விலைகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version