நடிகை சமந்தா பற்றி சமீப காலமாக பரபரப்பாக வரும் செய்தி, அவர் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் உடன் காதலில் இருக்கிறார் என கிசுகிசுக்கும் செய்தி தான்.
அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தாலும் காதலை அவர்கள் இன்னும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் காதல் பற்றிய செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை.
ஒரே வீட்டில் குடியேறுகிறார்களா
இந்நிலையில் சமந்தா மற்றும் அவரது புது காதலர் இருவரும் ஒரே வீட்டில் குடியேறப்போவதாகவும், அதற்காக புது வீடு தேடும் பணியில் இறங்கி இருப்பதாக செய்தி தற்போது பரவி வருகிறது.
சமந்தா பற்றிய இந்த செய்தி பாலிவுட் மீடியாக்களில் தீயாக பரவி வருகிறது.

