Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

0

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க (Samantha Ranasinghe) சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

நாடாளுமன்றில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramarathne) முன்னிலையில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்தார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கோசல நுவன் ஜயவீர (Kosala Nuwan Jayaveera)  கடந்த ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி காலமாகினார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இதனால் ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அண்மையில் அறிவித்திருந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் கோசல நுவன் ஜயவீரவுக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்கை சமந்த ரணசிங்க பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version