நடிகை சமந்தா சில வருடங்களுக்கு முன்பு நாகா சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு அதன் பிறகு முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார்.
தற்போது மீண்டும் அவர் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் சமந்தா மற்றும் இயக்குனர் Raj Nidimoru ஆகியோர் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கள் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது.
டாட்டூ
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒன்றாக இருந்தபோது கைகளில் ஒரே மாதிரி டாட்டூ போட்டுக்கொண்டனர்.
விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அப்படியே வைத்து இருந்தார். ஆனால் தற்போது அவர் அதை அழிக்க முடிவெடுத்து இருக்கிறார்.
சமீபத்தில் சமந்தா வெளியிட்ட போட்டோவில் டாட்டூ சற்று அழிந்து இருந்த நிலையில் அது வைரல் ஆகி இருக்கிறது.
Source: https://cineulagam.com/article/samantha-remove-her-matching-tattoo-in-hand-1742218875
