Home சினிமா விவாகரத்துக்கு பின் வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது.. உருக்கமாக பேசிய சமந்தா

விவாகரத்துக்கு பின் வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது.. உருக்கமாக பேசிய சமந்தா

0

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

மேலும் விவாகரத்துக்கு பிறகு சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

உருக்கமாக பேட்டி..

விவாகரத்துக்கு பின், கடந்த மூன்று வருடங்களாக வாழ்க்கை எப்படி இருக்கிறது என சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் சமந்தா.

நம் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டும் என விரும்புவோம். கடந்த மூன்று வருடங்கள் எனக்கு நடந்த விஷயங்கள் நடந்திருக்க கூடாது என தன் விரும்புவேன். ஆனால் திரும்பி பார்த்தால் அது வேறு விதமாக இருக்க முடியாது.

“வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை deal செய்து தான் ஆக வேண்டும். அதில் இருந்து வெளியில் வந்தால், நீங்கள் ஜெயித்தீர்கள் என அர்த்தம். தற்போது நான் அதிகம் வலிமையாக உணர்கிறேன். ஏனென்றால் நான் தீயை கடந்து வந்திருக்கிறேன். இதை ஆன்மீக விழிப்பு என்றும் சொல்லலாம்.”

“இன்றைய உலகில் ஆன்மீகம் அதிகம் தேவையாக இருக்கிறது. அந்த அளவுக்கு வலிகள் இருக்கிறது. அது தான் நல்ல நண்பனாக இருந்து வலிமை கொடுக்கிறது” என சமந்தா கூறி இருக்கிறார்.
  

Source: https://cineulagam.com/article/samantha-talks-about-life-after-divorce-1721256625

NO COMMENTS

Exit mobile version