சஞ்சய் தத்
1981ல் தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சஞ்சய் தத். ராக்கி என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
Munna Bhai MBBS, Lage Raho Munna Bhai, சஜான், நாம், Kaante என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். கேஜிஎப் 2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரையும் கதிகலங்க வைத்தார். இதன்பின் விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.


என் மனைவியிடம் அதை நான் செய்திருக்கவே கூடாது.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
மேலும் தற்போது ராஜா சாப், Dhurandhar, அகண்டா 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இன்று நடிகர் சஞ்சய் தத்தின் 66வது பிறந்தநாள் ஆகும். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 295 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 8 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸில் அவருக்கு ஒரு பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது, அதன் மதிப்பு சுமார் ரூ. 40 கோடி ஆகும். மேலும், துபாயில் அவரது குடும்பத்தினர் வசிக்கும் ஒரு மாளிகையும் உள்ளது.

