Home இலங்கை சமூகம் அதிகரிக்கும் போர் பதற்றம் : சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவுறுத்தல்

அதிகரிக்கும் போர் பதற்றம் : சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவுறுத்தல்

0

லெபனானில் வசிக்கும் தனது நாட்டின் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி சவுதி அரேபியா அறிவுறுத்தி உள்ளதாக சர்வ தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

கிளர்ச்சியாளர்களை ஒழிக்க இஸ்ரேல் உறுதி

மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களையும் முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.

இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுவதையடுத்து சவுதி அரேபியா இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Source: https://tamilwin.com/article/saudi-urges-citizens-to-leave-lebanon-immediately-1719865694

NO COMMENTS

Exit mobile version