Home இலங்கை சமூகம் செம்மணியில் ஸ்கேன் ஆய்வு பணிகள் ஆரம்பம்

செம்மணியில் ஸ்கேன் ஆய்வு பணிகள் ஆரம்பம்

0

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு
மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும்
காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த ஸ்கேன் நடவடிக்கைகள் இன்றையதினம்(04.08.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜி.பி.ஆர். ஸ்கேனர்(தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கேன்
நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை. 

முன்னுரிமை 

இந்நிலையில், ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கேனர் கருவியை
யாழ். பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்நடவடிக்கையை அடுத்து, இன்றையதினம் திங்கட்கிழமை குறித்த ஸ்கேனரை
பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான
ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய
தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி
முதல், மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு
முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version