Home இலங்கை சமூகம் கொழும்பில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவி

கொழும்பில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவி

0

கொழும்பில் மின்சாரம் தாக்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தையல் இயந்திரம் ஒன்றின் ஊடாக மின்சாரம் தாக்கியதால் 17 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

நுகேகொட மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நிஷானி பியுமிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார தாக்கி மாணவி உயிரிழப்பு

பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த நிஷானி, செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்துள்ளார்.

இதன்போது தையல் இயந்திரத்தின் மோட்டர் மற்றும் வயருடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார பிளக்கை அறையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிளக் பொயிண்டுடன் இணைக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது தவறான முறையில் மின்சாரம் பெற முயன்றபோது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மரண விசாரணை

மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட மாணவியை, அயல்வீட்டு பெண்ணொருவர் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ திடீர் மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க விசாரணைளை மேற்கொண்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/school-girl-student-death-in-colombo-1718181880

NO COMMENTS

Exit mobile version