Home இலங்கை சமூகம் கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதி கோரி போராட்டம்

கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதி கோரி போராட்டம்

0

கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தொடர்பான வழக்கு விசாணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.  

குறித்த மாணவிக்கு வழங்கப்படும் நியாயமான தீர்ப்பால் இலங்கையில் உள்ள அனைத்து மாணவிகளதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார் 

மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

https://www.youtube.com/embed/EgYb6yayDws

NO COMMENTS

Exit mobile version