Home இலங்கை சமூகம் கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா (Bay of Bengal) மற்றும் அரபிக் கடலைச் (Arabian Sea) சுற்றியுள்ள கடற்பரப்பிற்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடற்பரப்புகளில் காற்று மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும்

எனவே இதன்போது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகக் கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version