Home உலகம் பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையின் அதிரடி தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையின் அதிரடி தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி

0

பாகிஸ்தானில் (Pakistan) 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.

தகவலின் பேரில் அங்கு பாதுகாப்புப் படையினர் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

 மறைந்திருந்த பயங்கரவாதி

இந்தநிலையில், அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version