முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு
அருகில் கடைகளை நடத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த  8 கடை
உரிமையாளர்களை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ காவல் நிலைய பிரதான
பொலிஸ் பரிசோதகர் லலித் சதகிரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் 17
வயதுடைய முகவர் ஒருவரை சிகரெட் கொள்வனவு செய்ய பயன்படுத்தி
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

வெளிநாடொன்றில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்

விற்பனை சட்டப்படி தடை 

சந்தேக நபர்களின் கடைகளில் இருந்த சிகரெட் கையிருப்பு பொலிஸாரால்
வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை | Selling Illegal Items To Students Near Schools

இலங்கை சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சிகரெட் விற்பனை
செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு அருகில் இயங்கும்
தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களை இந்த கடைகளின் உரிமையாளர்கள்
குறிவைத்து வருகின்றனர்.

இலங்கையில் நபரின் கொடூர செயல்: நாய் எரித்து கொலை

இலங்கையில் நபரின் கொடூர செயல்: நாய் எரித்து கொலை

சுவர் மன்றங்கள்

பாடசாலை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள்
மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு பாடசாலையையும் இலக்காகக் கொண்டு
உருவாக்கப்பட்ட ‘சுவர் மன்றங்களின்’ ஆதரவுடன் இந்த நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை | Selling Illegal Items To Students Near Schools

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவில் உள்ள ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலை, தெடந்துவ ஸ்ரீ ரோஹன
கல்லூரி, ஹென்னாதோட்டை உயர்தர பாடசாலை, மஹாமாயா பெண்கள் கல்லூரி, போன்ற பல
பாடசாலைகளுக்கு ‘சுவர் மன்றங்கள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ
பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்