முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அத்தியவாசியப் பொருட்களின் விற்பனை விலை குறித்து முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

நாட்டில் 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையிலே கொழும்பில் (Colombo) நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சதொச ஊடாக விற்பனை

அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 100 ரூபா வரி அடங்கலாக 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் சதொச ஊடாக 845 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.

அத்தியவாசியப் பொருட்களின் விற்பனை விலை குறித்து முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Selling Prices Of Essential Commodities Former Mp

எனவே, இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய காய்ந்த மிளகாயை நீங்கள் எவ்வளவு தொகைக்குக் கொள்வனவு செய்கிறீர்கள் என்பது தொடர்பில் பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.

513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நெத்தலி 100 ரூபா வரி அடங்கலாக 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

ஆனால், நெத்தலி கிலோ கிராம் ஒன்று 960 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆட்சி செய்ய முடியாத நிலை

146 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 211 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

பருப்பு 227 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கான வரி 25 சதம்.

ஆனால் என்ன நடக்கிறது. இவை அனைத்துக்குமான விலைப்பட்டியலில் தவறு காணப்படுகிறது.

அத்தியவாசியப் பொருட்களின் விற்பனை விலை குறித்து முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Selling Prices Of Essential Commodities Former Mp

ஆகவே, அரசாங்கத்தினால் இந்த நிலைமையினை நிவர்த்தி செய்ய முடியாவிடின், நாட்டை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்படும்” என  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.