Home இலங்கை சமூகம் யாழ். நல்லூர் பகுதியில் கெட்டுப்போன ஐஸ்கிறீம் விற்பனை: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழ். நல்லூர் பகுதியில் கெட்டுப்போன ஐஸ்கிறீம் விற்பனை: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

0

யாழில் (Jaffna) பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட முகாமையாளரிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றி முகாமையாளருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், பூட்சிற்றிகள், உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார பரிசோதகர்

இதனடிப்படையில், நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த 12 ஆம் திகதி பூட் சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றியில், பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், பதனழிந்த ஐஸ்கிறீம்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன பெட்டி

இதனையடுத்து, பழுதடைந்த குளிர்சாதன பெட்டியுடன் பதனழிந்த ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர் ம. அனுசூதனன் கைப்பற்றியுள்ளார்.

இதன்பின்பு, நேற்று (17) பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு முகாமையாரை குற்றவாளி என இனங்கண்ட நீதவான் முகாமையாளரிற்கு 135,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version