முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சி.வி.கே. சிவஞானத்தின் கடிதம்
கிடைக்கப்பெற்ற நிலையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதில் கடிதம்
ஒன்றை சி.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக
தங்களுடைய விருப்பத்தை அதில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒன்றான எமது கட்சி பல்வேறு
விதமான சவால்கள் விமர்சனங்கள் இடையூறுகள் எல்லாவற்றையும் தாண்டி, எமது மக்களின்
இன நலன் சார்ந்து ஒற்றுமையாகவும் பலமாகவும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க
வேண்டும் என்பதில் பல விட்டுக் கொடுப்புக்களோடும் சகிப்புத்தன்மையோடும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்தும் பயணித்து வருகிறது.

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Adaikalanathan Sent Letter Response To Cvk

2023இல் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக
தங்களுடைய மத்திய குழு, வவுனியாவிலும் பின்னர் இறுதியாக மட்டக்களப்பிலும்
எடுத்த ஏகோபித்த முடிவிற்கமைய தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

எமது கட்சியும், புளொட் அமைப்பும் அந்த நேரத்தில், தேர்தல் நலன்கள், வெற்றி
தோல்விகள், அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளல் என்பவற்றைத் தாண்டி இன நலன்
சார்ந்து ஒருமித்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தை தங்கள் கட்சித் தலைமையிடம்
வலியுறுத்திய போதும் தங்களது கட்சி மத்தியகுழுவின் முடிவே இறுதியானது, என
உறுதியாக தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை அறிவித்தீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நலிவடையாமல் தொடர்ந்தும் பாதுகாப்பதன்
நோக்கத்தோடு தமிழ் தேசிய பரப்பில் இருந்த கட்சிகளோடு ஒன்றிணைந்து கூட்டணியாக
நாம் பயணித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை

இனப்பிரச்சினை தீர்வுக்கு முகம் கொடுத்திருக்கும் நமது இனம் தேர்தல் நலன்களை
மாத்திரம் முக்கியப்படுத்தும் இந்தப் பிரிவின் மூலம் எதிர்காலத்தில் பாரிய
சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தீர்க்கமாக நாம் எதிர்வு
கூறி இருந்தோம்.

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Adaikalanathan Sent Letter Response To Cvk

இன்று அந்த நிலைக்கு எங்களுடைய இனம் தள்ளப்பட்டிருப்பதை
நன்கு உணர்ந்து, இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தாங்கள் முன்
வைத்துள்ள அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

இன நலத்திற்காக விட்டுக்கொடுப்போடு
பயணிப்பதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பது எமது
இனத்துக்கு நலன் பயக்கும் என்ற கொள்கையோடு ரெலோ, ஈபி ஆர் எல் எப், ஈரோஸ்
ஆகியோருடன் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ஈ.
என். எல். எப் ) என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்கள்
நாங்கள். 

எமது கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள்

மேலும் கடந்த 2024 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில்
நாம் மக்கள் நலன் சார்ந்து ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வெற்றி தோல்விகளை
கருத்தில் கொள்ளாது பயணித்தமையையும், அம்பாறை மாவட்டத்தில் எட்டப்பட்ட
இணக்கப்பாடு தங்கள் கட்சியின் நிலைப்பாட்டால் தொடரமுடியாமல் போன துரதிர்ஷ்டமான
சூழலையும் கவலையுடன் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Adaikalanathan Sent Letter Response To Cvk

தங்கள் அழைப்பை ஏற்று எமது கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளோடும்
கலந்தாலோசித்து ஒன்றிணைந்து பயணிப்பது சம்பந்தமான தீர்க்கமான ஒரு முடிவை எட்ட நாம் தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.