Home இலங்கை சமூகம் யாழில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பொலிஸாருக்கான கருத்தரங்கு

யாழில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பொலிஸாருக்கான கருத்தரங்கு

0

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை
முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கான கருத்தரங்கு
ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்,
காங்கேசன்துறை, கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய பொலிஸ்
அதிகாரிகளுக்கான செயலமர்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களை தடுத்து வைத்தல், விசாரணை செய்தல்,
தொடர்பான சட்ட ரீதியான விடயங்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்
கலாநிதி ஜிகான் குணதிலகவினால் விளக்கமளிக்கப்ட்டுள்ளது.

மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி 

வடக்கு மாகாண மனித உரிமைகள் இணைப்பாளர்
த. கனகராஜ் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி இடம்பெறும் வேளையில், பொலிஸாருக்கு இவ்வாறான செயலமர்வு இடம்பெற்றமை முக்கிய அம்சமாகும். 

NO COMMENTS

Exit mobile version