அர்ச்சனா
சீரியல் நடிகைகளுக்கு தான் ரசிகர்களிடம் இப்போது அதிக மவுசு உள்ளது.
நாயகிகளை தாண்டி சின்னத்திரை பிரபலங்களை பற்றிய விஷயங்களை கேட்டால் ரசிகர்கள் டக் டக் என புட்டு புட்டு வைப்பார்கள். இதனால் சீரியல் நடிகைகளும் அதிக போட்டோ ஷுட் நடத்துவது, பேட்டி கொடுப்பது என அதிகம் ஆக்டீவாக உள்ளனர்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் அர்ச்சனா ரவிச்சந்திரன்.
அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் பின் தனியாக பாடல்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பிக்பாஸ் நிகழ்ச்சி என பிஸியாகவே உள்ளார்.
பிறந்தநாள்
நடிகை அர்ச்சனா, பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருணை காதலிப்பதும் இருவருக்கும் விஜய் டிவி விருது மேடையில் நிச்சயதார்த்தம் நடந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில் அர்ச்சனா தனது பிறந்தநாளை காதலன் அருணுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவர் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
