புதிய இணைப்பு
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் 7 பேர் இஸ்ரேலிய மண்ணில் கால் பதித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட போரின் பிறகு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) மத்தியஸ்த்தில் உருவாக்கப்பட்ட அமைதித் திட்டத்தின் முதல் படியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் செயல்முறை தொடர்பாக, முதலில் 7 பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று(13) விடுவித்துள்ளது.
இறந்த பணயக்கைதிகளின் உடல்கள்
அந்த ஏழு பேரும் ஈடன் மோர், அலோன் ஓஹெல், ஜிவ் பெர்மன், கலி பெர்மன், கை கில்போவா-தலால், ஓம்ரி மீரான் மற்றும் மதன் ஆங்ரெஸ்ட் என அடையாளம் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸ் அமைப்பு உயிருள்ள 20 பணயக்கைதிகளையும் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவை 1,718 பலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,722 ஆக இருந்தது, ஆனால் சர்வதேச ஊடகங்கள் இப்போது விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை 1,718 ஆக திருத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.
