Home இலங்கை அரசியல் பிள்ளையானுக்கான காணி ஒப்பந்தம் : அரசை கடுமையாக சாடிய சாணக்கியன்

பிள்ளையானுக்கான காணி ஒப்பந்தம் : அரசை கடுமையாக சாடிய சாணக்கியன்

0

முன்னாள் அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானுக்கு, மட்டக்களப்பில் பிடித்த காணிகளுக்கு ஒப்பம் வழங்கி இருக்கும் அரசாங்கம் மட்டக்களப்பு மாநாகர சபை எல்லைகளுக்குள் உள்ள காணிகளுக்கு ஒப்பம் வழங்க பின்வாங்குவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (05) நாடாளுமன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை தட்டிக்கேட்பீர்கள் என்ற அடிப்படையில்தான் மக்கள் இந்த ஆணையை தற்போதைய அரசிற்கு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்கள் சரியாக கவனிக்கவில்லை.

இந்தநிலையில், தற்போதைய அரசாங்கம் ஏனைய அமைச்சர்களை அமைத்து இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க முடியுமா இல்லையென்றால் சொல்லுங்கள் நாங்கள் அடுத்த அரசாங்கத்தை பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/cGZuKV98f5A

NO COMMENTS

Exit mobile version