இயக்குனர் ஷங்கர் எந்திரன் பட கதையை திருடியதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கு காரணமாக அமலாக்கத் துறை நேற்று ஷங்கரின் 10 கோடி ரூபாய் அசையா சொத்தை முடக்குவதாக அறிவித்தது.
அதற்க்கான அறிவிப்பை ட்விட்டரில் ED வெளியிட்டு இருந்தது. இது பற்றி ஷங்கர் தற்போது கோபமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
பதில்
இந்நிலையில் இது பற்றி ஷங்கர் கோபமாக பதில் கூறி இருக்கிறார். ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த உரிமையியல் வழக்கை நீதிமனறம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் அமலாக்கத்துறை ’இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்’ அளித்த அறிக்கையின்படி இந்த முடக்கம் செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிற்து.
எனக்கு இது பற்றி எந்த தகவலும் வரவில்லை. மீடியா மூலமாக தகவல் பரப்பப்பட்டு இருக்கிறது. இது அதிகார துஷ்ப்பிரயோகம் என ஷங்கர் குற்றம் சாட்டி இருக்கிறார்.