Home இலங்கை சமூகம் இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

0

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும்
28ஆம் திகதியன்று இலங்கைக்கு வர உள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunneththi) இதனை அறிவித்துள்ளார்.

புத்தளம் உப்பு தொழிற்சாலை

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த
இறக்குமதி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்ற நிலையும் உப்பு
இறக்குமதி தாமதத்துக்கு ஒரு காரணமாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

புத்தளம் உப்பு தொழிற்சாலைக்கு நேற்று, ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர்
ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ஹந்துன்நெத்தி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version