Home இலங்கை சமூகம் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை

திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை

0

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் இந்தத் தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா குறிப்பிட்ட சில பிரிவினருக்கே வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

திரிபோசா பற்றாக்குறை

இதன்படி, மூன்று வயதுக்கு மேற்பட்ட கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், இரத்த சோகை (இரும்புச்சத்து குறைபாடு) உள்ள தாய்மார்கள், சுகாதாரமற்ற எடை கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோசா வழங்கப்படுகிறது.

கடந்த பல வருடங்களாக மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு திரிபோசா வழங்கப்படவில்லை என்றும், இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்த போதிலும், இதுவரை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாகவும் மருத்துவர் சஞ்சீவ வருத்தம் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version