Home இலங்கை சமூகம் நாட்டில் முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை

நாட்டில் முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை

0

வைரஸின் புதிய உலகளாவிய மாறுபாடு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவிட் என்டிஜென் சோதனை
கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்காலிக அடிப்படையில் பயன்படுத்த போதுமான என்டிஜென் கருவிகள் தற்போது கையிருப்பில் உள்ளன.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள் 

எனினும், அவசரகாலத் திட்டமாக அமைச்சகம் அதிகமான என்டிஜன்களை இறக்குமதி
செய்யவுள்ளது.

புதிய மாறுபாட்டின் தீவிரம் குறைவாக இருந்தாலும், தயார்நிலைக்கு முக்கியம்
என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் கண்காணிப்பை
அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை பீதி அடைய வேண்டாம் என்று
வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை,அரச நிறுவன ஊழியர்கள் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்த வேண்டிய
அவசியமில்லை என்று, சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம், முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version