Home இலங்கை சமூகம் யாழ். இந்திய துணைத் தூதரக ஸ்தானிகரை சந்தித்த வட மாகாணத்தின் புதிய தலைமை செயலாளர்

யாழ். இந்திய துணைத் தூதரக ஸ்தானிகரை சந்தித்த வட மாகாணத்தின் புதிய தலைமை செயலாளர்

0

யாழ். இந்திய துணைத் தூதரக ஸ்தானிகர் சாய்முரளிக்கும் வட மாகாணத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசனுக்கும் இடையில்  கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (2) யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய துறைகளை ஆராயும் பணி 

இதன்போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் பரிசீலித்ததுடன், வர்த்தகம், வணிகம் மற்றும் திறனறிவு மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகளையும் கலந்துரையாடினர்.

அத்தோடு, நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கும், வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கான புதிய துறைகளை ஆராயும் பணி குறித்த செயல்பாடுகளையும், இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version