செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்துப் போராட்டமானது மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்- மருதனார்மடம் பகுதியில் இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்டது.
கையெழுத்துப் போராட்டம்
இந்தப் போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இந்த கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
