வடிவேலு
நடிகர் வடிவேலு நகைச்சுவை கிங் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்தார். இடையில், தமிழ் சினிமாவில் இருந்து தடை செய்யப்பட்ட இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது, சுந்தர் சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
வயதாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் அப்போதுதான்.. நடிகர் நானி சொன்ன அதிர்ச்சி தகவல்
ட்விட்டர் பதிவு
இந்த படம் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பாராட்டி நடிகர் சிம்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கேங்கர்ஸ்’ படத்தை பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு மேஜிக்கால் மொத்த படத்தையும் தன் வசப்படுத்திவிட்டார். சுந்தர் .சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Just watched #Gangers – a total laughter riot!#Vadivelu sir steals the show with his magic.
My best wishes to #SundarC anna and the entire team!@AvniCinemax_ @khushsundar pic.twitter.com/tTABasiQiM— Silambarasan TR (@SilambarasanTR_) April 24, 2025