சிம்பு
நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
வடசென்னை படத்தின் உலகில் அரசன் கதையை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ ரிலீஸான அஞ்சான், அட்டகாசம் படங்களின் வசூல் விவரம்.. இதோ
வேற லெவல் அப்டேட்
வெற்றிமாறனை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக பல பிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குநருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்தான்.
ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. இந்த ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த மதராஸி படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
