இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்.
இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தார்.
சமன் டி சில்வாவின் தனநில்ல திகே என்ற கிரிக்கெட் குறித்த பாடல் மிகவும் பிரபலமானது.
சமன் சில்வா உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ஐந்து தசாப்தங்களாக சமன் டி சில்வா இசைத்துறையில் சேவையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
