Home இலங்கை அரசியல் வடக்கில் டக்ளசின் கோட்டைக்குள் சென்ற தமிழரசு .! கிழக்கில் கருணாவிடமும் மண்டியிடுமா…!

வடக்கில் டக்ளசின் கோட்டைக்குள் சென்ற தமிழரசு .! கிழக்கில் கருணாவிடமும் மண்டியிடுமா…!

0

வடக்கு கிழக்கில் தற்போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அணிச் சேர்வுகள் தாறுமாறாக இடம்பெற்றுள்ளமை கட்சிகளிடையேயும் கட்சி ஆதரவாளர்களிடையேயும் பெரும் விசனத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சி என இதுகாலவரை கூறிவந்த இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் கோட்டைக்குள் சென்று சந்தித்துள்ளது.

அதிலும் ஏனையர்கள் செல்லாமல் கட்சியின் பிரதித் தலைவர் என சொல்லப்படுகின்ற சிவஞானம் சென்று டக்ளஸை சந்தித்துள்ளார்.

இவரது இந்த சந்திப்பு கிழக்கில் கருணாவை உசுப்பேற்றி விட்டது. ஏன் டக்ளஸை சந்தித்த மாதிரி எம்மையும் சந்திக்கலாம்தானே என அவர் கூறியுள்ளார்.

மறுபுறம் தமிழரசின் கிழக்கு மாகாண முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இந்த சந்திப்புக்கு எதிராக பொங்கியெழுந்துள்ளார்.

இவ்வாறு நகரும் காட்சிகள் என்ன என்பதை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய பார்வை…

https://www.youtube.com/embed/ByAWeE-WCmw

NO COMMENTS

Exit mobile version