சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மதராஸி படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.
விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் நல்ல வசூலை தான் படம் பெற்று வருகிறது. விரைவில் 100 கோடி வசூலை இந்த படம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள படம் லோகா பெரிய ஹிட் ஆனதால் மதராஸி சற்று பாதிப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஓடிடி தேதி
இந்நிலையில் மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
வரும் அக்டோபர் 3ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் மதராஸி வெளியாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-madharaasi-ott-release-date-1758049857
