மதராஸி
தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன்.
கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வசூல் சாதனை செய்தது.
அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்து மதராஸி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.
தந்தை ரோபோ சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகள் இந்திரஜா வெளியிட்ட அதிரடி பதிவு.. என்ன?
பாக்ஸ் ஆபிஸ்
திரையரங்குகளில் மாஸ் வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் வருகிற அக்டோபர் 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் 13 நாட்களில் மொத்தமாக ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
