Home சினிமா சிவகார்த்திகேயனின் மதராஸி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது பாருங்க

சிவகார்த்திகேயனின் மதராஸி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது பாருங்க

0

அமரன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனபிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்டது. அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவந்த மதராஸி படத்தின் ஷூட்டிங் இடையில் நிறுத்தப்பட்டு இருந்தது. முருகதாஸ் ஹிந்தியில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்க சென்றுவிட்டதால் இந்த படம் நிறுத்தப்பட்டு இருந்தது.

சிக்கந்தர் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் தற்போது முருகதாஸ் மீண்டும் மதராஸி படத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ்

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில் மதராஸி ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை மிலாடி நபி விடுமுறை, அடுத்த இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

அதனால் இந்த தேதியில் மதராஸி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version